ADDED : செப் 22, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம், செப். 23–
கூட்டுறவு வங்கி ஊழியர்களை தரக்குறைவாக பேசிய, விவசாய சங்க பிரதிநிதி மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
கூட்டுறவு வங்கி ஊழியர்களை தரக்குறைவாக பேசிய, விவசாய சங்க பிரதிநிதி ஈசன் முருகசாமி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்திடம் மனு அளித்தனர்.
