/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கற்கள் பெயர்ந்த குன்றத்துார் சாலை
/
கற்கள் பெயர்ந்த குன்றத்துார் சாலை
ADDED : அக் 09, 2024 12:20 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, பிள்ளைப்பாக்கம் சிப்காட் வழியாக, குன்றத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த முக்கிய சாலையில், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் இருந்து அதிகப்படியான கனரக வாகனம் செல்லும் முக்கிய சாலையாகும்.
போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலை, இருவழி சாலையாக இருந்ததால் வாகன நெரிசல் அதிகரித்தது. இதனால், நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, பிள்ளைப்பாக்கம் முதல், குன்றத்துார் வரை 104 கோடி ரூபாய் செலவில், 2019ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு, 2021ல் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது, இந்த சாலையில் பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதிகளில் சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள்பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இப்பகுதியை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து காணப்படும் இந்த சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.