/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை தரம் பிரிக்கும் இடங்களில் மரங்கள் நட கலெக்டர் அறிவுரை
/
குப்பை தரம் பிரிக்கும் இடங்களில் மரங்கள் நட கலெக்டர் அறிவுரை
குப்பை தரம் பிரிக்கும் இடங்களில் மரங்கள் நட கலெக்டர் அறிவுரை
குப்பை தரம் பிரிக்கும் இடங்களில் மரங்கள் நட கலெக்டர் அறிவுரை
ADDED : ஜன 13, 2024 11:05 PM

காஞ்சிபுரம்:குப்பை தரம் பிரித்த காலி இடங்களில், மரக்கன்றுகளை நட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில், உரக்கிடங்கு செயல்படுகிறது. இங்கு, 51 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, 2018 - 19ம் ஆண்டு துாய்மை பாரத இயக்கத்தில், 6.99 லட்சத்தில், 16 கோடியே 40 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டு உள்ளது.
கடந்த, 2022 - -23ம் ஆண்டு துாய்மை பாரத இயக்கம், 2.0 திட்டத்தில், 2 கோடி ரூபாய் செலவில், 2 கோடியே 34 லட்சத்து, 90,000 கிலோ மற்றும் 1 கோடியே 17 லட்சத்து, 45,000 கிலோ குப்பை அள்ளப்பட்டுள்ளன.
இதை தரம் பிரிக்கும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார்.
பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பை காலியான இடங்களில், மரக்கன்றுகளை நட வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., ரம்யா உட்பட பலர் உடனிருந்தனர்.