/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
/
மாநகராட்சி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
மாநகராட்சி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
மாநகராட்சி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 01, 2025 11:48 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேட்டில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டார்.
அப்போது, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்பு, கோமாட்சு நிறுவனம், எக்ஸ்னோரா மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருக்காலிமேடு அலபாத் ஏரி தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.
திருக்காலிமேட்டில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டட பணிகளை பார்வையிட்ட கலெக்டர், விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருக்காலிமேட்டில் புனரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தினையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.