/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
/
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
ADDED : செப் 28, 2025 01:33 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், ஓட்டப் பந்தய போட்டி மற்றும் சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
உடல் ஆரோக்கியத்தை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்தும் வகையில், நெடுந்துார ஓட்ட பந்தய போட்டி ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், 17 - 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்துார ஓட்ட பந்தய போட்டியும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்துார ஓட்ட பந்தய போட்டிகள் நடந்தது. இதில், 460 மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் தினத்தை கொண்டாடும் வகையில், சைக்கிள் போட்டியும் காஞ்சிபுரத்தில் நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - -மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.