/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு நிலத்தில் வசிப்போரின் ஆவணங்களை சரிபார்த்த கலெக்டர்
/
அரசு நிலத்தில் வசிப்போரின் ஆவணங்களை சரிபார்த்த கலெக்டர்
அரசு நிலத்தில் வசிப்போரின் ஆவணங்களை சரிபார்த்த கலெக்டர்
அரசு நிலத்தில் வசிப்போரின் ஆவணங்களை சரிபார்த்த கலெக்டர்
ADDED : மே 04, 2025 12:59 AM

இருங்காட்டுக்கோட்டை:ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சுமந்திரமேடு, பருத்திபட்டு ஆகிய பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்துவருவோருக்கு, வீட்டு மனை பட்டா வழங்க,காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆண்டு வருமானம், வங்கி கணக்குபுத்தகம் ஆகியவற்றை சரி பார்த்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதுார் சார் - ஆட்சியர் மிருணாளினி உட்பட பலர் உடனிருந்தனர்.