/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
12 விதமான வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் நிர்வாக அனுமதி
/
12 விதமான வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் நிர்வாக அனுமதி
12 விதமான வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் நிர்வாக அனுமதி
12 விதமான வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் நிர்வாக அனுமதி
ADDED : ஜூன் 05, 2025 09:48 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஆலந்துார் சட்டசபை தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதிகளில், ஒரு கோடி ரூபாய் செலவில், 12 விதமான வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நிர்வாக அனுமதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் எம்.பி., தனி தொகுதி உள்ளன.
இதில், ஆலந்துார் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், ஒன்பது பணிகள்; காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டில், இரண்டு பணிகள்; காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பணி என, மொத்தம் 12 விதமான பணிகளை செய்வதற்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி பணிகளுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நிர்வாக அனுமதி அளித்துள்ளார்.
தேர்வு செய்த பணிகளுக்கு முறையான டெண்டர் அறிவித்து, வளர்ச்சி பணிகள் துவக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.