/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியினர் குடியிருப்பு பணி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
/
பழங்குடியினர் குடியிருப்பு பணி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
பழங்குடியினர் குடியிருப்பு பணி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
பழங்குடியினர் குடியிருப்பு பணி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
ADDED : ஏப் 25, 2025 10:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி, தாமல் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
கீழம்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 32.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை கட்டட பணியினையும், 15.5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
தொடர்ந்து, தாமல் ஊராட்சியில் பிரதமர் ஜன்மன் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 17 பழங்குடியினர் குடியிருப்புகளையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், தாமல் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பள்ளி கட்டடத்தை அவர் பார்வையிட்டார்.