/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 15, 2025 09:58 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் பி.எம்., ஜன்மன் திட்டத்தின் கீழ், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 15 பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, தோட்டநாவல் ஊராட்சியில் 16.45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின், 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை, சிமென்ட் கல் சாலை ஆகியவற்றின் தரத்தை பார்வையிட்டார்.