/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பாராட்டு
/
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பாராட்டு
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பாராட்டு
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூலை 14, 2025 11:47 PM

காஞ்சிபுரம், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பயிலும் இரு மாணவியர், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றதற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 410 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024- - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயிலும் மேகலா மற்றும் ஹேமமாலினி ஆகிய மாணவியருக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் பென்சிங் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்ற வீரர் - -வீராங்கனையர், கலெக்டர் கலைச்செல்வியிடம் வாழ்த்து பெற்றனர்.