/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை மாத்திரை விற்ற கல்லுாரி மாணவர் கைது
/
போதை மாத்திரை விற்ற கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஜன 03, 2024 10:10 PM

மதுரவாயல்:மதுரவாயல் ஆண்டாள் நகரை சேர்ந்தவர், ஹரிபிரசாத், 22. இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பார்மஸி நான்காவது ஆண்டு படித்து வருகிறார்.
இவர், குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக போதை மாத்திரை, ஊசிகளை ஆர்டர் செய்து, சென்னைக்கு வரவழைத்து கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரது நண்பரான மதுரவாயல், ஆலப்பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துக்குமார் என்பவர், இரு தினங்களுக்கு முன், தனக்கு அடிக்கடி தலை வலிப்பதாக கூறியுள்ளார்.
தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை மாத்திரையை கரைத்து, ஊசியில் ஏற்றி அவருக்கு ஹரிபிரசாத் செலுத்தியுள்ளார்.
இதில் முத்துக்குமாருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின், இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஹரிபிரசாத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 200 போதை மாத்திரைகள், எட்டு போதை ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.