/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 26, 2024 04:54 AM
கூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கம் ஊராட்சி வி.பி.கே., நகரில் வசித்து வந்தவர் ஹரிஷ், 20. இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இறுதி ஆண்டு மாணவர்.
நேற்று முன்தினம் வீட்டில் ஹரிஷ் மட்டும் இருந்துள்ளார். வெளியே சென்ற அவரின் பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஹரிஷ் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள், ஹரிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

