ADDED : ஜன 18, 2024 12:53 AM

உத்திரமேரூர்:தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று கோலமிடுதல். அந்த வகையில், பொங்கல் திருநாளையொட்டி, வீட்டு வாசலில் பெண்கள் பல்வேறு வகைகளில் கோலமிடுகின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூர் சின்ன நாரசம்பேட்டை தெரு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், இணையதளத்தில் பயன்படுத்தும் செயலிகலால், அடிமையாகி விடக்கூடாது என, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் வாசலில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அப்பெண் கூறியதாவது:
அனைத்து வகை கண்டுபிடிப்புகளிலும் நன்மையை போல தீமையும் கலந்துள்ளது. மொபைல்போன் அதீத பயன்பாடு தீமைகளுக்கு வழி ஏற்படுத்தும்.
மாணவ - மாணவியர் மொபைல்போன்களில் தொடர்ந்து பேசுவது, மெசேஜ் அனுப்புவது, வாட்ஸாப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் போன்ற சமூக வளைதளங்களிலும் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.
இதனால் கவனம் சிதறுகிறது.
மொபைல்போனின் தீமைகளை உணர்ந்து அதை பயன்படுத்த வேண்டும் என்பதை கூறும் வகையில், இப்பொங்கல் பண்டிகையில் கோலம் மூலம் ஓவியம் வரைந்து வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.