/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிப்., 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிப்., 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிப்., 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிப்., 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : பிப் 04, 2024 06:04 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோற்சவம் 13 நாட்கள் நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டு உற்சவம், வரும் 15ம் தேதி, காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக பிப்., 14ல் காலை சண்டி ஹோமமும், இரவு மூஷிக வாகன உற்சவமும் நடக்கிறது.
இதில், தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
இதில், ஏழாம் நாள், வெள்ளி ரதம் உற்சவம், பிப்., 21ல் விமரிசையாக நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கர மடம் மேலாளரும், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமுமான சுந்தரேச ஐயர், உதவி ஆணையர், செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.