/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் பூங்கா சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
/
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் பூங்கா சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் பூங்கா சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் பூங்கா சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 14, 2025 12:46 AM
குன்றத்துார்:செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டு மென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இந்த ஏரிக்கரை, 8 கி.மீ., துாரம் உடையது. குன்றத்துார் அருகே, ஏரியின் உபரி நீர் வெளியேற்றப்படும் 19 கண் மதகு, ஐந்து கண் மதகு மற்றும் ஏரியின் முழு அழகை கண்டு ரசிக்கும், 'வீவ் பாய்ட்', ஏரிக்கரைக்கு செல்லும் பிரதான வழிகள் அமைந்துள்ளன.
மேலும், 19 கண் மதகு அருகே, ஏரிக்கரையில் கன்னியம்மன் கோவில் உள்ளது. குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள ஐந்து கண் மதகு அருகே நீச்சல் குளம் போல் தேங்கி நிற்கும் தொட்டியில், இளைஞர்கள் குளித்து வருகின்றனர்.
குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரிக்கரை கீழ் பகுதியில், ஏராளமான அரசு நிலம் உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகமானோர் திரளும் இந்த இடத்தில் பூங்கா அமைத்து, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பூண்டி ஏரியில் பூங்கா அமைத்து, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது போல், செம்பரம்பாக்கம் ஏரியையும் மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.