/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி
/
நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி
நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி
நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி
ADDED : ஜூன் 17, 2025 12:14 AM
வாலாஜாபாத், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வழி தடத்திலான அரசுப் பேருந்துகள், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வராததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தடம் எண்: 212ஏ, 212பி., ஆகிய அரசு பேருந்துகள் காஞ்சிபுரம் வரை இயக்கப்படுகின்றன.
இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, திருப்பதி வரை இயங்கும் தடம் எண்: 212எச்., அரசு பேருந்தும், காஞ்சிபுரத்தில் இருந்து, கல்பாக்கம் வரையிலாக இயங்கும் தடம் எண்: 157 அரசு பேருந்தும் வாலாஜாபாத் வழியாக இயங்குகிறது.
இப்பேருந்துகள் வாயிலாக, வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமத்தினர் மற்றும் ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் தடத்தில், வாலாஜாபாத் வழியாக செல்லும் அனைத்து வகை பேருந்துகளும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வராமல் ரவுண்டனா பகுதி, பேருந்து நிறுத்தத்தில் நின்று இயக்கப்படுகிறது.
இதனால், பேருந்துகளுக்காக பேருந்து நிலையத்திற்குள் காத்திருக்கும் பயணியர், பேருந்து புறப்பாடு குறித்த தகவல் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தடத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.