தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 11, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் சாலை தெருவில் இருந்து, ஜெ.ஜெ., நகர் வழியாக, கீழம்பி ஆட்டோ நகருக்கு செல்லும் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலை பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து, கீழம்பி செல்லும் சாலையில், மழையால் சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.சரவணன், காஞ்சிபுரம்.

திருப்புலிவனத்தில்

அரசு மருத்துவமனை தேவை

உத்திரமேரூர் அடுத்து உள்ளது திருப்புலிவனம் கிராமம். சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர், தங்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிக்கு செல்கின்றனர்.

இதனால், கிராமப்புற பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்படுவதோடு, பணமும் விரயம் ஆகிறது. எனவே, திருப்புலிவனத்தில் அரசு பொது மருத்துவமனை கட்டித் தர வேண்டும்.

- -டி. அறிவழகன், திருப்புலிவனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us