தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : நவ 19, 2024 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், சந்தவேலுார் ஊராட்சி அலுவலகம், அவசர சிகிச்சை மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நுாலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சேதமடைந்து உடைந்து உள்ளது.

இதனால், அவசர சிகிச்சை மையம், பள்ளி, ஊராட்சி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், சேதமான மழைநீர் கால்வாயில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு. தர்மராஜ், சந்தவேலுார்.

சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் எதிர் தெருவில், சாலையின் குறுக்கே, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன், இப்பாலம் வழியாக கனரக வாகனம் சென்றபோது, சிறுபாலம் சேதமடைந்து உடைந்தது.

இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சேதமடைந்த சிறுபாலம் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், இவ்வழியாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, கடல்மங்கலத்தில் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.குமார், கடல்மங்கலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us