தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 26, 2024 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுராந்தகத்திற்கு கூடுதல் பஸ் தேவை

-உத்திரமேரூர் பேருந்து நிலையதிலிருந்து, மதுராந்தகத்திற்கு தடம் எண்:15, 17 ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தடம் எண்:17 பேருந்து,நெல்வாய் கூட்ரோடு வழியாகவும், தடம் எண்:15 பேருந்து, எல்.எண்டத்தூர் வழியாகவும், மதுராந்தகத்திற்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், இரு பேருந்துகளின் இருக்கைகளும், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திலே நிரம்பி விடுகிறது. இதனால்,போகும் வழியில் உள்ள நிறுத்தங்களில், பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ -- மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர், பேருந்தின் உள்ளே ஏற முடியாமல், படிகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.

சில நேரங்களில் பயணியர் விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

எனவே உத்திரமேரூலிருந்து, மதுராந்தகத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்.

- டி.எஸ்.அறிவழகன்,

திருப்புலிவனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us