தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 10, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குப்பை கொட்டும் இடமான கால்வாய்


உத்திரமேரூர் ஒன்றியம், அத்தியூர் மேல்துாளி ஊராட்சி, அத்தியூர் கிராமத்தில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் தேங்கி வந்தது.

இங்கு, நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க, 2012 -- 22ம் நிதியாண்டில் 15வது நிதிக்குழு திட்டத்தில், 31,000 ரூபாய் செலவில் வடிகால்வாய் கட்டப்பட்டது.

தற்போது, முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து, குப்பை கொட்டப்பட்டுள்ளது. மேலும், உடைந்த மரத்தின் கிளைகள் வடிகால்வாயில் போடப்பட்டுள்ளன. இதனால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால்வாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடையில் இருந்த இருக்கைகள் உடைந்து மாயமாகின. இருக்கையை தாங்கி பிடிக்கும் கம்பிகள் மட்டுமே, தற்போது துருப்பிடித்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஓரிக்கை, வேளிங்கபட்டரை கே.கே.நகர் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடையில் இருந்த இருக்கைகள் உடைந்து மாயமாகின. இருக்கையை தாங்கி பிடிக்கும் கம்பிகள் மட்டுமே, தற்போது துருப்பிடித்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஓரிக்கை, வேளிங்கபட்டரை கே.கே.நகர் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் சாலையில் கே.சி.சி., பேங்க் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பேருந்துக்காக ஏராளமான பயணியர் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.பேருந்து நிறுத்தம் அருகே வடிகால்வாய் மூடாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால், பேருந்துக்கு வரும் பயணியர், கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேலும், சாலை வளைவில் உள்ள கால்வாயில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, திறந்த நிலையில் உள்ள வடிகால்வாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடையில் இருந்த இருக்கைகள் உடைந்து மாயமாகின. இருக்கையை தாங்கி பிடிக்கும் கம்பிகள் மட்டுமே, தற்போது துருப்பிடித்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஓரிக்கை, வேளிங்கபட்டரை கே.கே.நகர் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் சாலையில் கே.சி.சி., பேங்க் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பேருந்துக்காக ஏராளமான பயணியர் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.பேருந்து நிறுத்தம் அருகே வடிகால்வாய் மூடாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால், பேருந்துக்கு வரும் பயணியர், கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேலும், சாலை வளைவில் உள்ள கால்வாயில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, திறந்த நிலையில் உள்ள வடிகால்வாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகையில் இருந்து, எழிச்சூர் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் வாயிலாக மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின்கம்பங்களில் கொடிகள் படர்ந்து மின் ஒயரை சூழ்ந்துள்ளன.மின் ஒயர்களில் படர்ந்துள்ள கொடிகளால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us