தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 17, 2024 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 01:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.ஆர்.பி., சத்திரத்தில் குப்பை தொட்டி அவசியம்


ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட வி.ஆர்.பி., சத்திரம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகள், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படுகிறது.

அங்கு, குப்பை தொட்டி இல்லாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், குப்பையில் உணவிற்காக வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- க.ஆனந்தன், ஸ்ரீபெரும்புதுார். மாமல்லன் நகர் வங்கியில் அலைக்கழிப்பு


காஞ்சிபுரம், மாமல்லன் நகர் எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் புதிதாக கணக்கு துவங்க வரும் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களிடம், வங்கியில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் முறையான விபரம் தருவதில்லை.

வங்கியில் வாடிக்கையாளர் சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி விபரம்,விண்ணப்பங்களை கூட முறையாக வழங்குவதில்லை. எனவே, வாடிக்கையாளர்களுக்கு முறையாக சேவை வழங்க, மாமல்லன்நகர் வங்கி கிளை ஊழியர்களுக்கு,எஸ்.பி.ஐ., வங்கியின் மண்டல அலுவலக அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

- ஜி.பவானி, காஞ்சிபுரம். குடிநீர் தொட்டி அருகே குப்பை திருக்காலிமேடில் சீர்கேடு


காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு உடையார் தெரு, சவுராஷ்டிரா தெரு, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தினமும் குப்பை சேகரிக்க வருவதில்லை.

இதனால், இப்பகுதியினர் உடையார் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி அருகே குப்பை கொட்டுகின்றனர். நாட்கணக்கில்தேங்கும் குப்பையால் துர்நாற்றம்வீசுகிறது.

குடிநீர் குழாய் அருகே குவியலாக உள்ள குப்பை, காற்றில் பறக்கும்போது, குடிநீர் தொட்டியில் பிடிக்கும் தண்ணீரில் மாசு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, குடிநீர் தொட்டி அருகே உள்ள குப்பையை அகற்றுவதோடு, துாய்மை பணியாளர்கள், 22வது வார்டில் தினமும் குப்பை சேகரிக்க வரவேண்டும்.

↔ - எம்.அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம். வேகத்தடை மீது வர்ணம் பூச வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


காஞ்சிபுரம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் இருந்து, புள்ளலுார் கிராமம் வழியாக எடையார்பாக்கம் செல்லும் சாலைஉள்ளது. இந்த சாலையில், புள்ளலுார் கிராம வளைவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. இதனால், இச்சாலை வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, பள்ளூர் - -எடையார்பாக்கம்சாலையில் இருக்கும் வேகத்தடைகள்மீது வெள்ளை நிற வர்ணம் பூசவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us