/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
/
புகார் பெட்டி இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
புகார் பெட்டி இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
புகார் பெட்டி இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
ADDED : டிச 26, 2024 12:58 AM

வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த காரணித்தாங்களில் இருந்து பேரிஞ்சம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பேரிஞ்சம்பாக்கம், வளத்தஞ்சேரி, கண்ணதாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிரமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, ஒரகடம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பேரிஞ்சம்பாக்கம் பெருமாள் கோவில் அருகே, இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து மாடுகள் நிற்கின்றன. இதனால், இரவு நேரத்தில் அவசர தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சாலையை மறித்து நிற்கும் மாடுகளை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- மா. புஷ்பராஜ், பேரிஞ்சம்பாக்கம்
டாஸ்மாக் கடை
இடம் மாற்ற கோரிக்கை
உத்திரமேரூர் பேரூராட்சி, கள்ளமா நகரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கடைக்கு வருபவர்கள் காஞ்சிபுரம் சாலை ஓரத்திலே அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர்.
அப்போது, சாலையிலே வாகனத்தை நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பள்ளி மற்றும் வேலை முடித்து நடந்து செல்வோருக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். உத்திரமேரூர் நகரின் நுழை வாயிலிலே மதுபானக்கடை அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.எஸ். அறிவழகன், திருப்புலிவனம்.
குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம்
பயன்பாட்டிற்கு வருமா?
உத்திரமேரூர் அடுத்து, மேல் துாளி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் அருகே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் வழங்கும் இயந்திரம், பயன்பாட்டில் இல்லாததால், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்தால், வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்படும்.
- நா. அசோக், மேல்துாளி.
சேதமடைந்த சாலை
சீரமைக்கப்படுமா?
சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் நாகலுாத்து, தேனம்பாக்கம், தும்பவனம், டெம்பிள் சிட்டி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், குமார் தெரு சந்திப்பில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு. ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.அன்பழகன், காஞ்சிபுரம்.