/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி செய்தி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
/
புகார் பெட்டி செய்தி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
புகார் பெட்டி செய்தி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
புகார் பெட்டி செய்தி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
ADDED : ஏப் 15, 2025 12:55 AM

உத்திரமேரூர் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சியில் பட்டாங்குளம் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய, 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.
தற்போது, குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அப்பகுதியில் பலத்த காற்று வீசும் நேரங்களில், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும், சேதமடைந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.
-- எம். பூர்ணச்செல்வி,
உத்திரமேரூர்.