/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டிஉத்திரமேரூர் - செய்யாறு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
புகார் பெட்டிஉத்திரமேரூர் - செய்யாறு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புகார் பெட்டிஉத்திரமேரூர் - செய்யாறு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புகார் பெட்டிஉத்திரமேரூர் - செய்யாறு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : டிச 05, 2024 01:52 AM

உத்திரமேரூர் - செய்யாறு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, செய்யாறுக்கு ஒரேயொரு மாநகர பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை தவறவிட்டால், மூன்று மணி நேரத்திற்கு பயணியர் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
இல்லையெனில், காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டும். இதனால், பயணியருக்கு நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.
எனவே, செய்யாறுக்கு கூடுதல் மாநகர பேருந்தை இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.எஸ்.அறிவழகன், திருப்புலிவனம். ராஜ வீதிகளில் கடும் நெரிசல் போக்குவரத்தில் மாற்றம் வருமா?
காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையான காந்தி சாலையில், பல ஆண்டுகளாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், காந்தி சாலையை மூன்று வழி பாதையாக மாற்றியமைத்தனர்.
இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதால், காந்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்காமல் மகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர்.
அதேபோல, காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான கிழக்கு, மேற்கு ராஜ வீதி, அன்னை இந்திரா காந்தி, செங்கழுநீரோடை வீதி என, நான்கு ராஜ வீதிகளிலும் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தில் மாற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.நீலகண்டன், காஞ்சிபுரம். பராமரிப்பு இல்லாமல் பாழாகும் பாளையத்து அம்மன் கோவில் குளம்
குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள அண்ணா தெருவில் பாளையத்து அம்மன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன.
இக்கோவில் அருகே பாளையத்து அம்மன் கோவில் குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இக்குளம் பராமரிப்பு இல்லாததால், ஆகாய தாமரை படர்ந்து வளர்ந்துள்ளது.
மேலும், அருகே உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து குப்பை கொட்டப்பட்டு, கழிவுநீர் பாயும்குளமாக மாறி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோவில் குளத்தை துார்வாரி, குளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ள, நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.