
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதாள சாக்கடையில் அடைப்பு
குளத்தில் கலக்கும் கழிவுநீர்
கா ஞ்சிபுரம் சர்வ தீர்த்தகுளக்கரையை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட சிவன் கோவில்கள் மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மேற்கு பகுதி குளக்கரை சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், சர்வதீர்த்த குளத்தில் கலக்கிறது.
இதனால், குளத்து நீர் மாசடையும் சூழல் உள்ளதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சர்வதீர்த்தம் மேற்கு பகுதி குளக்கரையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.மோகன், காஞ்சிபுரம்.

