
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துார்ந்துள்ள வடிகால்வாயை
சீரமைக்க வேண்டுகோள்
உ த்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் வன்னியர் தெரு உள்ளது. இந்த தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிந்து செல்ல, 20 ஆண்டுக்கு முன் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
தற்போது, வடிகால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல், மண் துார்ந்துள்ளது. இதனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மானாம்பதி வன்னியர் தெருவில், துார்ந்துள்ள வடிகால்வாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- எம்.அரிச்சந்திரன். மானாம்பதி.

