/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : குடியிருப்பில் விடப்படும் ஊற்றுநீரால் மக்கள் அவதி
/
புகார் பெட்டி : குடியிருப்பில் விடப்படும் ஊற்றுநீரால் மக்கள் அவதி
புகார் பெட்டி : குடியிருப்பில் விடப்படும் ஊற்றுநீரால் மக்கள் அவதி
புகார் பெட்டி : குடியிருப்பில் விடப்படும் ஊற்றுநீரால் மக்கள் அவதி
ADDED : நவ 10, 2025 11:24 PM

குடியிருப்பில் விடப்படும்
ஊற்றுநீரால் மக்கள் அவதி
சி ன்ன காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள விஷ்ணு நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆற்றங்கரை என்பதால், பள்ளத்தில் ஊற்றுநீர் அதிகமாக வருகிறது.
இதனால், கட்டுமான பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளத்தில் தேங்கியுள்ள ஊற்றுநீர் மின்மோட்டார் மூலம், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் மூன்று நாட்களாக விடப்படுகிறது. இதனால், குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
நாள்கணக்கில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. எனவே, விஷ்ணு குடியிருப்பு பகுதியில் ஊற்றுநீர் விடாமல், வேறு பகுதியில் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சிவபாலன், காஞ்சிபுரம்.