
வாலாஜாபாத் தெருக்களில்
நாய்கள் தொந்தரவு அதிகரிப்பு
வா லாஜாபாத் பேரூராட்சி, 18 வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், பல தெருக்களில் நாய்கள் கூட்டம் அதிகரித்து மக்களுக்கு பல வகையில் தொந்தரவாக இருந்து வருகிறது.
தெருக்களில் கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள், வாகனங்கள் வரும்போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங் கள் மீது மோதுதல் அல்லது கீழே விழுந்து காயமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
நாய்களின் தொல்லையால், குழந்தைகள் சாலையில் விளையாட முடியாத சூழலும், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் நிலவுகிறது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சியில் நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். தங்கராஜ், வாலாஜாபாத்.

