sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 புகார் பெட்டி

/

 புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : ஜன 15, 2026 06:59 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலை மைய தடுப்போரம்

மண் குவியலால் விபத்து அபாயம்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் படர்ந்துள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சாலையில் படர்ந்துள்ள மண்ணை நெடுஞ்சாலை மையத் தடுப்போரம் குவித்தனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக, மையத் தடுப்போரம் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலை மையத் தடுப்போரம் உள்ள மண் குவியல்களை அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே. முருகன்,

சுங்குவார்சத்திரம்.






      Dinamalar
      Follow us