/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி: சிப்காட் சாலையில் திறந்த நிலை மின் பெட்டியால் விபத்து அபாயம்
புகார் பெட்டி: சிப்காட் சாலையில் திறந்த நிலை மின் பெட்டியால் விபத்து அபாயம்
புகார் பெட்டி: சிப்காட் சாலையில் திறந்த நிலை மின் பெட்டியால் விபத்து அபாயம்
UPDATED : ஏப் 29, 2026 09:32 PM
ADDED : ஏப் 29, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவின் ஒருபகுதியான எறையூர், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் சிப்காட் சாலையில், சிப்காட் நிர்வாகம் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மின் கம்பங்களுக்கு இணைப்பு செல்லும் மின் கேரியர் பெட்டிகள் சாலையோரம் உள்ளன. சிப்காட் சாலை நடைபாதையில் உள்ள இந்த மின் பெட்டிகள் கதவு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளன.
இதனால், இவ்வழியாக நடந்து செல்லும் ஊழியர்கள் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, திறந்த நிலையில் உள்ள மின் பெட்டிக்கு கதவு அமைக்க வேண்டும்.
- சு. ஸ்ரீதரன்,
எறையூர்.
