UPDATED : மே 13, 2026 04:53 PM
ADDED : மே 13, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
வலம்புரி வினாயகர் கோவில் தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் பேரூராட்சி, 13வது வார்டில் வலம்புரி வினாயகர் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்காததால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது.
இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து குடியிருப்பு மக்கள் அவதிபடுகின்றனர்.
மேலும், சாலையோரங்களில் குப்பைகள் சரி வர அகற்றம் செய்யாததால் அச்சாலை வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர்.
எனவே, வலம்புரி வினாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரித்து, குப்பைகள் தேங்காமல் துாய்மை பணியாளர்கள் பராமரித்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெ. முருகன்,
வாலாஜாபாத்.
