UPDATED : மே 18, 2026 05:33 PM
ADDED : மே 18, 2026 05:32 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையை வழியே, தினமும் பல்லாயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் உள்ள போந்துார், வல்லம், வடகால் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், தங்களில் மாடுகளை கொட்டகை அமைத்து கட்டி வைத்து பராமரிப்பது இல்லை.
மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் திரிக்கின்றன. திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்த மாட்டு தொழுவத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு. சந்திரசேகர்,
ஸ்ரீபெரும்புதுார்.
