கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்
கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்
ADDED : செப் 03, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
காரணித்தாங்கல், செப். 4–
காரணித்தாங்கலில் மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரகடம் அருகே, காரணித்தாங்கலில் இருந்து, பேரிஞ்சம்பாக்கம் கிராமத்திற்கு மின் கம்பங்கள் வழியே, மின்கம்பி செல்கிறது. இதில், காரணித்தாங்கல் பகுதியில் சாலையோரம் மின் கம்பம் கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.
விழும் நிலையில் மின் கம்பம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
