நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்
UPDATED : செப் 21, 2026 03:24 PM
ADDED : செப் 21, 2026 03:21 PM
ஸ்ரீபெரும்பதுார் - சிங்கபெருமாள் கோவில் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், வல்லம், வடகால், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை கொட்டகைளில் வைத்து பராமரிக்காமல் சாலையில் திரிய விடுகின்றனர்.
அவை, கூட்டமாக சாலைகளில் வலம் வருவதோடு, திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
அதேபோல், மையத் தடுப்பு மற்றும் சாலையில் நடுவே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஓய்வெடுக்கும் மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவத்தில் அடைக்க வேண்டும்.
- த.ராம்கி,
ஸ்ரீபெரும்புதுார்.
