/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பனை மரங்களை அகற்றிய கல் குவாரி மீது புகார்
/
பனை மரங்களை அகற்றிய கல் குவாரி மீது புகார்
ADDED : ஜூலை 15, 2025 09:38 PM
உத்திரமேரூர்:எடமச்சியில் பனை மரங்களை அகற்றிய தனியார் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்க மாநில பொருளாளர் பாலாஜி, சாலவாக்கம் வருவாய் ஆய்வாளர் சூர்யகலாவிடம் நேற்று அளித்த புகார் மனு விபரம்:
உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் தனியார் கல் குவாரி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு, கல் குவாரி துவங்க விதிமுறைகள் மீறி அனுமதி அளித்தது தொடர்பான வழக்கு, பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்த கல் குவாரிக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் பாதை அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்துள்ளது.
இந்நிலையில், கல் குவாரி நிர்வாகத்தினர், குவாரி அமைய உள்ள இடத்தில் உள்ள பனை மரங்களை அகற்றி வருகின்றனர். வாகனங்கள் செல்வதற்கான பாதை மற்றும் பிற தேவைகளுக்காக, பனை மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
தன்னிச்சையாக செயல்படும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் உள்ளது.
இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் ஆய்வாளர் தெரிவித்தார்.