/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் விரிவுபடுத்திய பகுதி சமன்படுத்தாமல் உள்ளதாக புகார்
/
சாலையோரம் விரிவுபடுத்திய பகுதி சமன்படுத்தாமல் உள்ளதாக புகார்
சாலையோரம் விரிவுபடுத்திய பகுதி சமன்படுத்தாமல் உள்ளதாக புகார்
சாலையோரம் விரிவுபடுத்திய பகுதி சமன்படுத்தாமல் உள்ளதாக புகார்
ADDED : ஜூன் 25, 2025 08:28 PM
வாலாஜாபாத்:அங்கம்பாக்கத்தில், சாலையோரம் விரிவுபடுத்திய பகுதி சமன்படுத்தாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது அங்கம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, அவளூர் செல்லும் சாலை குறுகியதாக உள்ளதோடு, ஆங்காங்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.
இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடப்பதில் சிரமம் இருந்தததால் சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
அதன்படி, இச்சாலையில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தி சீரமைக்க, ஒருங்கிணைந்த கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மூன்று மாதங்களுக்கு முன், மூன்று சிறுபாலம் மற்றும் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில், இச்சாலையில் சரியான அளவிற்கான ஜல்லி கற்கள் மற்றும் தார் பதிக்கப்படவில்லை. சாலையோரம் விரிவுப்படுத்திய பகுதிகள், சரி,வர சமன்படுத்தாமல் தாழ்வாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். சாலை சீரமைப்பு பணியை முறையாக செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் கனகவல்லி கூறியதாவது,
அங்கம்பாக்கம் கிராம சாலை பணி இன்னும் நிறைவு பெறவில்லை. விரிவாக்கம் செய்த சாலையோரப் பகுதிகள் முறையாக சமன்படுத்தப்பட்டுள்ளது.
சாலையோர தாழ்வான இடங்கள் தார் ஊற்றி சமப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.