தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி, வாலாஜாபாத் ரயில் நிலையங்களில் பயணியர் பரிதவிப்பு! ரூ.100 கோடி வருவாய் தந்தும் வசதிகளில்லாத அலவம்

காஞ்சி, வாலாஜாபாத் ரயில் நிலையங்களில் பயணியர் பரிதவிப்பு! ரூ.100 கோடி வருவாய் தந்தும் வசதிகளில்லாத அலவம்

காஞ்சி, வாலாஜாபாத் ரயில் நிலையங்களில் பயணியர் பரிதவிப்பு! ரூ.100 கோடி வருவாய் தந்தும் வசதிகளில்லாத அலவம்

1


UPDATED : செப் 28, 2026 04:23 AM

ADDED : செப் 27, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 04:23 AM ADDED : செப் 27, 2026 08:52 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:நெல், கனரக தகடுகள் முனையாக செயல்படும் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ரயில் நிலையங்கள் வாயிலாக, ஆண்டுதோறும் 100 ரூபாய்க்கு மேல் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தும், அந்த ரயில் நிலையங்களில் குடிநீர், பயணியர் இருக்கை, கூரை, காத்திருப்போர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என, ரயில் பயணியர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, மின்சார ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கிழக்கு, நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பழையசீவரம், பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த ரயில் நிலையங்களில், 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் அரக்கோணம், ரேணிகுண்டா, காச்சிகுடா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்யும் பயணியர் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, வாலாஜாபாத் ரயில் நிலையத்தில், கார், இருசக்கர வாகனம், பொக்லைன், சிமென்ட், மணல், ஜல்லி கலக்கும் கலவை இயந்திரம் ஆகியவை ஏற்றுமதி முனையமாக செயல்படுகிறது. இதன் மூலமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

அதேபோல, காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில், பிற மாவட்டங்களில் இருந்து நெல் ஏற்றி இறக்கும் முனையமாகவும், கனரக தகடுகள் இறக்கும் பிரதான முனையமாகவும் செயல்படுகிறது. இதன் மூலமாக, பல கோடி ரூபாய் வருவாய் ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைக்கிறது.

இருப்பினும், பயணியர் தங்கும் அறைகள், குடிநீர், இருக்கை, கூரை ஆகிய வசதிகள் இல்லை என, ரயில் பயணியர் குற்றஞ்ச்சாட்டு வருகின்றனர்.

குறிப்பாக, குடிநீர் குழாய், ரயில் நிலைய மின் விளக்குகளை சிறிய பழுது நீக்க வேண்டும் என்றாலும், அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்வே ஊழியர்களை வரவழைக்க வேண்டி உள்ளது. மேலும், புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை என, ரயில் பயணியர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம்- - சென்னை ரயில் பயணியர் சங்க நிர்வாகி ரங்கநாதன் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிக்கு பயணிக்கும் பயணியர் மூலமாக கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கிறது. மேலும், சரக்கு ரயில்கள் மூலமாக, பல கோடிகள் வருவாய் கிடைக்கிறது.

இருந்த வருவாய் மூலமாக, குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு செய்து ரயில் பயணியருக்கு குடிநீர், கழிப்பறை, இருக்கை, கூரை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தலாம். ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க தயக்கம் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, இரட்டை ரயில் வழித்தடத்திற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து, வளர்ச்சி பணிகள் செய்து வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் கிழக்கு, வாலாஜாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியருக்கு தேவையான குடிநீர், இருக்கை, கூரை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Image 1623858


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us