UPDATED : அக் 12, 2026 08:11 PM
ADDED : அக் 12, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க, காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் தெரு நுழைவாயிலில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், ஊரடங்கு தளர்வுக்குப் பின் முழுமையாக அகற்றப்படவில்லை. இதனால், இச்சாலை வழியாக உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன் கோவில்களுக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், சாலை வளைவில் வாகனங்களை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இடையூறாக உள்ள கான்கிரீட் தடுப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.
சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
