/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு தரைப்பாலம் கட்டும் பணி நிறுத்தம்
/
தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு தரைப்பாலம் கட்டும் பணி நிறுத்தம்
தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு தரைப்பாலம் கட்டும் பணி நிறுத்தம்
தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு தரைப்பாலம் கட்டும் பணி நிறுத்தம்
ADDED : ஏப் 14, 2025 12:48 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில், கசக்கால்வாய் செல்கிறது. இந்த கசக்கால்வாய் குறுக்கே, தனி நபர் ஒருவரின் வீட்டுமனைப்பிரிவு நிலத்திற்கு செல்வதற்கு, தரைப்பாலம் கட்டும் பணியை துவக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமானப் பணிக்கு, வேருடன் சில மரங்களை அகற்றப்பட்டு உள்ளதாக கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
இதையறிந்த, ஊராட்சி தலைவர் அன்பழகன் கட்டுமான இடத்திற்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். முறையாக அனுமதி பெறாததால், கட்டுமான பணிகளை நிறுத்த கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி மற்றும் தீர்மானம் பெறாமல், கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.
ஊராட்சி நிர்வாகம் சார்பாக நேற்று கட்டுமான அனுமதி குறித்து கேட்ட போது, 'எனக்கு முதல்வர், அமைச்சர் தெரியும்' என, மிரட்டுகிறார். இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது என, ஊராட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.