/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியாம்பூண்டி சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்
/
களியாம்பூண்டி சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்
களியாம்பூண்டி சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்
களியாம்பூண்டி சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஆக 08, 2025 01:48 AM
உத்திரமேரூர்:-களியாம்பூண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியர் பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி, சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு போதிய இடவசதி இல்லாததால், நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2025 -- 26ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, புதிய கட்டடம் கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பூமி பூஜையில் பங்கேற்று, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, காட்டாங்குளம் ஊராட்சி, படூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட, பொதுமக்கள் காத்திருப்பு அறையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவர் வசந்தி, காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.