/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர்மட்ட பாலம் கட்டும் பணி ரூ.19 கோடியில் துவக்கம்
/
உயர்மட்ட பாலம் கட்டும் பணி ரூ.19 கோடியில் துவக்கம்
உயர்மட்ட பாலம் கட்டும் பணி ரூ.19 கோடியில் துவக்கம்
உயர்மட்ட பாலம் கட்டும் பணி ரூ.19 கோடியில் துவக்கம்
ADDED : பிப் 12, 2025 08:14 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் நெய்யாடுபாக்கம், காவாம்பயிர், வயலக்காவூர், மலையாங்குளம் ஆகிய கிராமங்கள், செய்யாற்றின் கரையோரம் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தோர் வாலாஜாபாத் செல்ல, திருமுக்கூடல் வழியாக 10 கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.
மேலும், செய்யாற்றில் வெள்ளம் இல்லாத நேரங்களில், வாகன ஓட்டிகள் ஆற்றில் இறங்கி இளையனார்வேலூர் வழியாக வாலாஜாபாத் சென்று வருகின்றனர். இந்நிலையில், நெய்யாடுபாக்கத்தில் இருந்து இளையனார்வேலூர் வரை செய்யாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
அதன்படி, 2024 --- 25ம் நிதியாண்டில், 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' கீழ், 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். நெய்யாடுபாக்கம் ஊராட்சி தலைவர் பொன்மொழி, தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

