தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி

 பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி

 பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி


ADDED : டிச 01, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்: -ரெட்டமங்கலத்தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், 8.44 லட்சம் ரூபாய் செலவில், புதிய சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

உத்திரமேரூர் ஒன்றியம், ரெட்டமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, படிக்கும் மாணவ -- மாணவியருக்கு சத்துணவு தயார் செய்ய, பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் உள்ளது.

கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமையல் கூடம், பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், 8.44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, பள்ளி வளாகத்தில் வேறொரு இடத்தில், புதிய சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் கூறியதாவது:

ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில், 8.44 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, சமையல் கூடம் பயன்பாட்டிற்கு வரும். அதுவரைக்கும் பழைய கட்டடத்திலே உணவு சமைத்து மாணவ -- மாணவியருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us