/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அவளூர் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டுமான பணி
/
அவளூர் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டுமான பணி
அவளூர் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டுமான பணி
அவளூர் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டுமான பணி
ADDED : அக் 31, 2025 02:08 AM

வாலாஜாபாத்:  அவளூர் பேருந்து நிறுத்தத்தில் 6 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.
வாலாஜாபாத் அடுத்த, அவளூர் கூட்டுச்சாலை வழியாக, சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.
அவளூர், ஆசூர், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர், இப்பகுதி பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய நிழற்குடை இடிந்து விழும் நிலையில் இருந்தது.
சில மாதங்களுக்கு முன் அக்கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் புதிய நிழற்குடை கட்ட அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அவளூர் கூட்டுச்சாலையில் உத்திர மேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 6 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவங்கி உள்ளது.