/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'முதல்வர் படைப்பகம்' கட்டுமான பணி துவக்கம்
/
'முதல்வர் படைப்பகம்' கட்டுமான பணி துவக்கம்
ADDED : நவ 05, 2025 09:39 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுமான பணியை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, உப்பேரிகுளம் பகுதியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான, பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் கவனித்து வந்தது.
இந்நிலையில், காஞ்சி புரம் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் உள்ள உப்பேரிகுளம் பகுதியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுமான பணியை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
மாநராட்சியின் கல்வி நிதியின்கீழ் நகராட்சி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 7,846 சதுர அடி பரப்பில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன்கூடிய முதல்வர் படைப்பகம் 3.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது.
போட்டி தேர்வுகளுக் கான புத்தகங்கள் கொண்ட நுாலகம், கட்டணமில்லா இணைய வசதி, ஆலோசனை கூடங்கள், தொழில் முனைவோருக்கான கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம் பெற உள்ளன.
இந்நிகழ்வில், தி.மு.க.,- - எம்.எல். ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

