/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 ரயில்களை காஞ்சி வரை நீட்டிக்க பிரதமருக்கு நுகர்வோர் சங்கம் மனு
/
5 ரயில்களை காஞ்சி வரை நீட்டிக்க பிரதமருக்கு நுகர்வோர் சங்கம் மனு
5 ரயில்களை காஞ்சி வரை நீட்டிக்க பிரதமருக்கு நுகர்வோர் சங்கம் மனு
5 ரயில்களை காஞ்சி வரை நீட்டிக்க பிரதமருக்கு நுகர்வோர் சங்கம் மனு
ADDED : செப் 18, 2025 02:01 AM
காஞ்சிபுரம்:ஐந்து ரயில்களை காஞ்சிபுரம் வரை நீட்டிக்கக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் -விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் பெர்ரி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கும்,பட்டுச்சேலை எடுக்கவும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், காஞ்சிபுரத்திற்கு நேரடியாக வர தினசரி ரயில் சேவை இல்லாததால், சிலர் சென்னை எழும்பூர், சென்ட்ரல் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம் வருகின்றனர்.
அதேபோல, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர காஞ்சிபுரத்தில் நேரடியாக தினசரி ரயில் சேவை இல்லை. இதனால் அரக்கோணம், செங்கல்பட்டு சென்று அங்கிருந்து ரயில் பிடித்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
இதனால், பக்தர்கள், பட்டுச்சேலை வாங்க வருவோர், சுற்றுலாப் பயணியர், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த தரப்பினருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்திற்கு தினசரி ரயில் சேவை வழங்க வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து, அரக்கோணம் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களை அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல, காக்கிநாடாவில் இருந்து, செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.