/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 4வது ரயில் முனையம் உருவாக்க நுகர்வோர் சங்கம் பிரதமருக்கு மனு
/
காஞ்சியில் 4வது ரயில் முனையம் உருவாக்க நுகர்வோர் சங்கம் பிரதமருக்கு மனு
காஞ்சியில் 4வது ரயில் முனையம் உருவாக்க நுகர்வோர் சங்கம் பிரதமருக்கு மனு
காஞ்சியில் 4வது ரயில் முனையம் உருவாக்க நுகர்வோர் சங்கம் பிரதமருக்கு மனு
ADDED : ஏப் 09, 2025 09:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை நான்காவது ரயில் முனையமாக உருவாக்க பரிசீலனை செய்யக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி. பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
சென்னையின் பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் அதன் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையின் பரப்பளவு விரிவடைந்திருந்தாலும், மற்ற மெட்ரோ பெருநகரங்களை ஒப்பிடும்போது, சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் என மூன்று ரயில், ‛டெர்மினல்' எனப்படும் முனையம் மட்டுமே உள்ளன.
இதில், நான்காவது ரயில் முனையத்தை வடசென்னை ரயில் நிலையங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து உருவாக்க ரயில்வே நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
இந்த நான்கு ரயில் முனையங்களும் வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் அருகருகே உள்ளன. இதனால், மேற்கண்ட ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, பயணியருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
சென்னையில் இருந்து, பரந்துார் விமான நிலையம், காஞ்சிபுரம் வழியாக வேலுார் வரை அதிவேக ரயில் சேவையை மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பின் வாயிலாக துவக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனவே, காஞ்சிபுரத்தை நான்காவது ரயில்வே முனையமாக உருவாக்கினால், சரக்கு ரயில் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் மற்றும் பன்னாட்டு விமான சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கும், உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

