/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியை அழகுபடுத்தி மேம்படுத்த நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
/
காஞ்சியை அழகுபடுத்தி மேம்படுத்த நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
காஞ்சியை அழகுபடுத்தி மேம்படுத்த நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
காஞ்சியை அழகுபடுத்தி மேம்படுத்த நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
ADDED : மே 23, 2025 07:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சி மாநகரை அழகுபடுத்தி மேம்படுத்த கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, கலெக்டர் கலைச்செல்விக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் கோவில் நகரமாகவும், பட்டு நகரமாகவும் விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதான சாலைகள் அகலமாக இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதேபோல உள்ளது.
தேரோட்டம் இல்லாத சாலைகளில் மைய தடுப்பு அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் தெருக்களை அடைக்க போடப்பட்ட கான்கிரீட் தடுப்புச்சுவர் கற்களை அகற்ற வேண்டும். ஆடிசன்பேட்டை, புதிய ரயில் நிலையம் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். காஞ்சியில் உள்ள கோவில்களை சுற்றிபார்க்க பேட்டரி வாகனம் இயக்க வேண்டும்.
பொன்னேரிக்கரையை துார்வாரி படகு குழாம் அமைக்கவும், நத்தப்பேட்டை ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைக்கவும், காஞ்சிபுரம் நுழைவு பகுதியில் அலங்கார பூச்செடிகள் அமைத்து நகர அழகுபடுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.