/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொடரும் இரவுநேர மின்தடை வைப்பூர் கிராமத்தினர் அவஸ்தை
/
தொடரும் இரவுநேர மின்தடை வைப்பூர் கிராமத்தினர் அவஸ்தை
தொடரும் இரவுநேர மின்தடை வைப்பூர் கிராமத்தினர் அவஸ்தை
தொடரும் இரவுநேர மின்தடை வைப்பூர் கிராமத்தினர் அவஸ்தை
ADDED : ஜன 01, 2025 12:37 AM
ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத் திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில், 250க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த கிராமம் ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.
இங்குள்ள வீடுகளுக்கு ஒரகடம் மின்வாரிய அலுவலகம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்பகுதியில் நான்கு நாட்களாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது.
நள்ளிரவு 12:00 முதல் காலை 6:00 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. இரவில் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால், இப்பகுதிவாசிகள் துாக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், வயதானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் நீடிக்கும் இரவு நேர மின் தடையை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒரகடம் மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
வைப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு, வடக்குப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டது.
தற்போது, துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டு, சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.