ADDED : ஜூன் 06, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து வரதராஜபுரம், எருமையூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், நடுவீரப்பட்டு, நந்தம்பாக்கம், சோமங்கலம், அமரம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், துணை மின் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் மின் தடை ஏற்படுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
