/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு பயிற்சி வகுப்பு துவக்கம்
/
கூட்டுறவு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 04, 2025 11:49 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழு நேர கூட்டுறவு பட்டயப்பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளர் மங்கை தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2025 - 26ம் கல்வி ஆண்டிற்குரிய முழு நேர கூட்டுறவு பட்டயப்பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, நடப்பாண்டு சேர்ந்த மாணவ- - மாணவியருக்குரிய கூட்டுறவு பாட புத்தகங் களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பிரேம்குமார் மற்றும் விரிவுரையாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.